Thursday, November 27, 2008

கல்லறை கீதம்..!

அன்பான தமிழ் உறவுகளே!

தமிழர் இல்லாத நாடு இல்லை. தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை. இந்த கருவோடு தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரனுடன் இணைந்து இந்த விடுதலைப்போரட்டத்தை வெல்ல வேண்டும். தமிழருக்கான தனிநாடு அமைக்க வேண்டும். இந்த உயரிய எண்ணத்தோடு களமாடி அந்நிய தேசப்படைகளோடு போரிட்டு மடிந்து தாய் தமிழீழம் காத்த அந்த காவல் தெய்வங்களை வணங்கும் உச்சநேரம் நெருங்குகிறது.

தேசியத்தலைவர் அவர்களின் உரை நிகழும். அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவொலி எழுப்பப்படும். ஏக காலத்தில் எல்லா ஆலயங்களிலும் இந்த நினைவொலி எழுப்பப்படும்.

அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்படும். மனதாலே அந்த மாவீரக் கண்மணிகளுக்கு வணக்கம். இது மௌன அஞ்சலி.

பின்னர் துயிலும் இல்ல பிரதான நினைவுச்சுடரை தளபதி ஒருவர் ஏற்ற ஏனைய கல்லறைகளுக்கான நினைவுச்சுடரை அந்தந்த மாவிரரின் பெற்றோர் ஏற்றுவோர். அல்லது உறவினர் அல்லது நண்பர்கள் ஏற்றுவார்கள். இந்த நேரத்தில் அங்கே கல்லறை கீதமாகிய துயிலுமில்லப்பாடல் அங்கே ஒலிபரப்பாகும். அது காற்றினில் தவழும் நேரத்தில் நெஞ்சங்கள் எல்லாம் விம்மும்.

இந்த கல்லறை கீதமாகிய துயிலுமில்லப்பாடல் அந்த பிரத்தியேக இடம் தவிர வேறு எங்கும் ஒலிபரப்பப்படமாட்டாது. யாரும் அதனை ஒலிபரப்பவும் விரும்புவதில்லை. அந்தளவிற்கு மக்கள் அதற்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

ஏராளமான மக்கள் அந்த துயிலுமில்லப்பாடலை கேட்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. அவர்களுக்காக இங்கே......!

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!

எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!

அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!

எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

அன்பார்ந்த மக்களே! நாமும் அந்த மாவீரச்செல்வங்களை நினைந்து உருகி எமது வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

0 comments: