கார்த்திகை என்றதும் ஈழத்தமிழர் நினைவெல்லாம் மாவீரர்கள்தான் நிற்பார்கள். ஈழவிடுதலைக்கு தமது உயிர்களை துச்சமென மதித்து அந்நியப்படைகளோடு போராடி மரணித்த புனிதர்களை நினைவு கூறும் வாரம். இது 1991ம் ஆண்டு தொடக்கம் ஆரம்பமாகி இன்றுவரை நடைபெறுகிறது.
இந்த மாவீரர் வாரம் ஆரம்பத்தில் கார்த்திகை 21 தொடக்கம் 27 வரை நடைபெற்றது. பின்னர் காலத்தின் நிலைகருதி 3நாட்களாக குறைத்து இப்போது 25 முதல் 27 வரை கொண்டாடப்படுகிறது. இது தமிழீழ தேசமெங்கும் உத்தியோக பூர்வமாக இருந்தாலும் இன்றும் மாவீரர் வாரம் என்ற சொற்பதம் பாவிக்கப்படுகிறது.
முதல் மாவீரன் லெப்ரினண்ட் சங்கர் மரணித்த கார்த்திகை 27ந் திகதியை மாவீரர் நாளாக கொண்டு இந்த வீரமறவர்களின் நினைவு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீதியெங்கனும் சிவப்பு மஞ்சள் கொடிகள் அழகாக பறக்கும். மாவீரர் வாரம் என்ற பதாகைகள் தொங்கும். முக்கிய இடங்களில் வீதியின் குறுக்கே மாவீரரின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் அழகிய வளைவுகள் கட்டப்படும். எல்லா இடங்களிலும் மாவீரர் நினைவுப்பாடல்கள் ஒலிக்கும்.
மாவீரர் வாரத்தையொட்டி வீதிகள் சுத்தமாக்கப்படும். நினைவுப்போட்டிகள் நடாத்தப்படும். எங்கும் எதிலும் மாவீரர் நினைவுதான்.
இந்த மாவீரர் வாரங்களில் மாவீரர்களின் நினைவுப்பாடல்களில் சிலவற்றை இங்கே கேட்கலாம்.
இந்தப் பாடல் ஒரு பாலஸ்தீனக்கவிதை என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மைத்தன்மை பற்றி தெரியாது. எப்பொழுதும் மனதை உருக்கும் ஒரு பாடல்.
இதோ வரிகள்..! பாடலை பாடிய குரலும் மெட்டமைத்த கரங்கள் யாருக்கு சொந்தம் என தெரியவில்லை.
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு...
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
வார்த்தைகள் போதவில்லை வரலாறு பாடுமுன்னே.
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
======================================
2 comments:
//பின்னர் காலத்தின் நிலைகருதி 3நாட்களாக குறைத்து இப்போது 25 முதல் 27 வரை கொண்டாடப்படுகிறது.//
இது நான் அறியாத தகவல். விடுதலைபுலிகளைபற்றி அபிப்ராயபேதம் உள்ளவர்கள் கூட அதனை உணர்வுபூர்வமாக அறியும் ஒரு காலம் இம்மாவீரர் வாரப்பகுதி.
அத்துடன் உங்களின் வலைமுகப்பும் மாற்றியமைக்கப்பட்டு நன்றாக உள்ளது. வாழ்த்துகள்
மனதைப் பிழியும் ஒரு வாரம்தான் மாவீரர் வாரம். காலச்சூழலுக்காக 3 நாட்கள் ஆனாலும், 365 நாளும் நினைத்து நினத்து பூசிக்க வேண்டிய கல்லறை தெய்வங்கள்.
நன்றி அருண்மொழிவர்மன். வருகைக்கும் இடுகைக்கும்.
Post a Comment