Tuesday, November 25, 2008
தலைவன் பிறந்தான்! தமிழர் நிமிர்ந்தோம்!!
இன்று 54வது அகவையை நிறைவு செய்யும் தமிழீழத் தேசியத்தலைவருக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தீயில் எரியும் தேசம் கண்டு
திமிறி எழுந்து திண்ணிய நெஞ்சனே
பாயில் படுத்து நீ பரவசம் கண்டிருந்தால்
பசுந்தமிழ் ஈழம் பார்த்திருப்போமா?
கோயில் கொண்டு உன்னை கும்பிடவேணும்
கோமகனே உன்னைப் போற்றிட வேணும்.
வரலாறு தந்த
வல்லமை நீ!
புறநானூறு தோற்ற
புதுமை நீ!
வாழ்விழந்த தமிழரின்
வழிகாட்டி நீ!
இன்று தமிழீழத்தேசிய தலைவரின் 54வது பிறந்த தினம். முகமிழந்த தமிழரின் முகவரியாக இருப்பவர் எங்கள் தலைவர். இந்த விடுதலைப்போரை செப்பமாக நடாத்தி முப்படைகளையும் கொண்ட ஒரு நவீன இராணுவத்தை அமைத்து விடுதலைப் போருக்கு புதிய பரிமானம் கொடுத்தவர்.
எத்தனையோ வலிகள்,எத்தனையோ இழப்புகள், எத்தனையோ துரோகங்கள் எல்லாவற்றையும் தாங்கி இன்றும் வீறு கொண்டு எழும் இனமாக வைத்திருக்கும் தலைவனின் மகோன்னதமான தலைமைப்பண்பு அதி உன்னதமானது.
"இழப்புகள் எமக்கு புதியவையுமல்ல. அவற்றை சந்திப்பது இதுதான் முதல் தடவையுமல்ல" இந்த காலத்திற்கு ஏற்ற உனது சிந்தனை இது. சூரியத்தேவன் உனது சூறாவளீ அடிக்கும். அது புது வரலாறு படைக்கும். உன்மேல் நாம்கொண்ட நம்பிக்கை எள்ளளவும் குறையவுமில்லை. குறையப்போவதும் இல்லை.
உன் விரல் நீளும் திசையில் விடுதலை வேங்கைகள் பாயும். வெற்றி நிச்சயம். அந்த நாளிகைக்காக காத்திருக்கிறோம்.
"உன்னை வாழ்த்த
வயதில்லை
உன்னை சார்ந்தோரை
பின்னாளில் போற்ற
அருகதை இல்லை..."
என்ற நண்பனின் வரிகள் என்னையும் சஞ்சலப்படுத்துகிறது. இடர்சூழந்த இந்நேரத்தில் இங்கிருந்து நாம் எதனையும் எழுதலாம்.
நீங்கள் விடுதலைத் தீயில் குதித்து உங்களை ஆகுதியாக்கி மூட்டும் கனென்ற விடுதலை நெருப்பில் நாங்கள் குளிர் காய்கிறோம்.
ஆனால் எமது மூச்சு, பேச்சு எல்லாமே உனதும், உனது போராளிகளினதும், உனைத்தாங்கும் அந்த வன்னி மக்களின் நினைவுதாம். காலம் விரியும். வெற்றி பரவும். எமது சுதந்திரக் காற்று எமைத்தழுவும்.
தலைவனை வாழ்த்திய இனிமையான பாடல்....!
"பொங்கிடும் கடற்கரை ஓரத்தில்.....!"
ஒரு தலைவனின் வரவிற்கு காத்திருந்தோம். அவன் பிறந்தான். தமிழன் நிமிர்ந்தான்.
முகமிழந்த்த எமக்கு முகவரியானான்.
Labels:
ஈழம்,
தேசியத்தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
whis u happy birth day to u....ENDRU POL ENDRUM NEENGAL VALLA EN THEYVAM SRI GANGA DEVI THUNAI NERGUM. TAMILLANIN THAGAM TAMIL EELA THAYAGAM.
AMMASI MUTHU RAM
PARAMAKUDI,TAMIL NADU
SINGAPORE
பதிவும் தளமும் அருமை. இவரைப்பற்றிய சரியான வரலாறு இதுவரை எழுதப்படவில்லை என்ற கவலை உண்டு. ஆனால் காலம் நிச்சயமாக இவர் பெயரை வரலாற்றில் எழுதிக்கொள்ளும்
கனதியான, காலதிற்குகந்த உன் எழுத்துக்கள் பலரையும் சென்றடைய பாதை வகு.
நன்றி நண்பரே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எம்மாலான பணிகள் என்றும் தொடரும்.
Amiable post and this post helped me alot in my college assignement. Say thank you you for your information.
Post a Comment