Wednesday, November 26, 2008

வருடத்தில் ஒருநாள் வந்துவிட்டுப்போ..!

ஈழ மண்ணின் விடுதலை வேண்டி தம்முயிரை துச்சமென மதித்தி விடுதலைத்தீயில் தம்மை ஆகுதியாக்கி உறங்காத கண்மணிகளாய் கல்லறைகளில் உறங்கும் மாவீரச்செல்வங்களுக்கு எமது வீரவணக்கங்கள்.

இன்றைய தினத்தை முன்னிட்டு 2006ம் ஆண்டு எழுதிய கவிதை ஒன்று மீண்டும் இதே பதிவில் இடம் பெறுகிறது.

மங்கும் மாலையென
மயங்கி இருந்து விடாதே!
கார்த்திகை குளிரென
கம்பளிக்குள் சுருண்டு விடாதே!
பொங்கும் உணர்வோடு
புறப்பட்டு வா!
நெய் விளக்கு ஏற்ற வேண்டாம்!
நெடு நேரம் நிற்க வேண்டாம்!
அரைமணி நேரம் வந்து
அமைதியாய் இருந்து விட்டுப்போ.....!
போகும்போது பார் தேகமெல்லாம
புல்லரித்து போய்விடும்.
வந்து பார்!
கல்லறைகளுக்கு முன்னால்
கண்மணிகளைப் பெற்றோர்,
கண்ணீரால் கழுவியபடி...
மலர் தூவி மாலை சூடி
மாணிக்கங்களை மனதார பூசிப்பர்.
அன்புச்செல்வங்களை ஆரத்தழுவுவர்.
மற்றவர்க்காய் மடிந்த மணி
இருந்தாலும்........
பத்து மாதம் சுமந்து பெற்ற
பிள்ளையடா........
பிரிவுத்துயர் இராதா ?
உற்றார் உறவினர்
நண்பர் எல்லாம் - அந்த
உயர் நாழிகைக்காய் காத்திருப்பர்.
தலைவன் உரை கேட்க
தரணியே தவமிருக்கும்.
உரை முடிந்ததும் உணர்வுகள் பொங்கும்.
உள்ளங்கள் குமுறும்.
மணியொலி கேட்கும் - அதை
விம்மல்கள் அடக்கும்.
கல்லறை கீதம் காற்றினில் தவழும்.
கல் நெஞ்சனையும் அது கசிய வைக்கும்.
கணப்பொழுதில் நெஞ்சம்
கனத்துப் போய்விடும்.
நெய் விளக்கு நெடிகள்
நெஞ்சை நெகிழச் செய்யும்.
விம்மும் குரல்கள் கேட்டு
நெஞ்சம் வெடித்திருக்கும்.
கல்லறைகளுக்கருகே தென்னங்கன்றுகள்!
இது கல்லறைகள் அல்ல கருவறைகள்.
இவர்கள்
புதைக்கப்பட்டவர்கள் அல்ல விதைக்கப்பட்டவர்கள்.
விதைத்ததுகள் நாளை விருட்சமாகும்.
அவையெல்லாம்
விடுதலையை விரைவுபடுத்தும்.
புண்ணிய வீரர் எண்ணியதை - நாளை
புலிச்சேனை முடித்து வைக்கும் - என்ற
திண்ணிய நெஞ்சுடன் எம் தலைவன்
திறம்படச் செய்வான்.
இந்த எண்ணத்துடன் வீடேகுவர்
மற்றோர் மற்றும் மாவீரரைப் பெற்றோர்.
விரலிடுக்கில் தென்னம்பிள்ளைகள்.
அதுவும் விடுதலைக்காற்றை எம்மோடு
நாளை சுவாசிக்கும்.
எதற்கும் நீயொரு தடவை
வந்து பார்!.

நவம்பர் 27ந் திகதி மாவீரர் தினத்தன்று
மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெறும் நிகழ்வின்
நினைவாக வரைந்தது

4 comments:

said...

உணாரிவு பூர்வமான கவிதை. வெளிநாட்டில் இருப்போர் வந்து பார்க்காவிடாலும் இந்நாளின் முக்கியத்துவத்தை உணைவுபூர்வமாக அனுபவித்தாலே நன்று. ஆனால் அதை கூட பலர் செய்வதில்லை......

2 ஆண்டுகாளின் முன்னர் எழுதியதானாலும் அதன் உணார்வு குன்றாமல் இருப்பது கவிதைக்குள்ளா சிரஞ்சீவித்தன்மையை காட்டுகின்றது.

உணர்வுகளை சற்று கூட்டியதுக்கு நன்றிகள்

said...

நன்றி அருண்மொழிவர்மன், வருகைக்கும் இடுகைக்கும்.

மாவீரர் சுமந்த கனவுகள் நனவாகும் நாள் தொலைவில் இல்லை. நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

said...

வணக்கம் தமிழ் விரும்பி.பல நாட்களாக உங்கள் பக்கம் வரவில்லை.மாவீரர் தினம்,
தலைவரின் பிறந்த நாள் என்று அசத்தலான பதிவுகள்.கவிதை மனதை உலுக்கிவிட்டது.எமக்காக தம்மை இழந்த தெய்வங்கள்.அவர்கள் வழிகாட்டுவார்கள் தெய்வமாயிருந்து.

said...

நன்றி ஹேமா, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். காலத்தால் அழியாத அந்த மாவீரச் செல்வங்களை எப்பொழுதும் நினைக்கிறோமா இல்லையே,இப்படித்தான் இந்த மாவீரர் வாரத்தில்தான். மாண்ட வீரர் கனவு பலிக்கும். மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்.