ஒரு அழகிய பகற்பொழுது. அது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபம். சமகாலக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு போராளிகள் எமக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தனர். இருவரையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் ஒரு போராளி கேட்டார் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எம்மிடம் கேளுங்கள். தயக்கம் இருந்தால் ஒரு சிறிய கடதாசியில் எழுதி முன்னாலே அனுப்புங்கள். நிறைய கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் பதில்கள் கிடைத்தன.ஒரு மாணவன் கேட்டிருந்தான் அண்ணா ஒரு பாடல் பாடிக்காட்டுங்கள்? நான் நினைத்தேன் ஏன் இவன் இப்படி கேட்கிறான் என்று. அப்ப அந்த போராளி அண்ணா சொன்னார் கருத்தரங்கு முடியும் போது பாடுகிறேன். நான் எதையும் நினைக்கவில்லை. பின்னர் முடியும் தறுவாயில் புன்முறுவல் பூத்த முகத்துடன் "சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்...." என்ற "உயிர்ப்பூ" படப்பாடலை பாடினார். அப்போதுதான் தெரிந்தது இவர்தான் போராளிப்பாடகர் சிட்டு என்று.
அந்த பாடலை கேட்க.....
Friday, August 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வணக்கம் நண்பா
சிட்டுவின் பாடல்கள் அன்றிலிருந்து இன்று வரை என் நெஞ்சை விட்டகலாதவை, தன் தனித்துவமான குரல்வளத்தால் சிறப்பித்தவர் அவர். உங்கள் இடுகை சிறப்பானதொன்றாகி விட்டது. தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைப்பு கொடுத்தீர்களா? ஏனெனில் நான் இப்பதிவு வந்தபோது கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
//.....கானாபிரபா Said...
சிட்டுவின் பாடல்கள் அன்றிலிருந்து இன்று வரை என் நெஞ்சை விட்டகலாதவை...........//
நிச்சயமாக பிரபா! சிட்டுவின் பாடல்கள் இப்பொழுதும் நெஞ்சில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் நினைக்கிறேன் இன்னும் தமிழ் மணத்தில் இணைக்கவில்லை. இணைத்துவிடுகிறேன் விரைவில். நன்றி உங்கள் வருகைக்கும் இடுகைக்கும்.
வணக்கம் தமிழ்விரும்பி.உங்கள் தளம் வந்தேன்.இவ்வளவு நாளும் உங்கள் தளம் அறியாமல் இருந்திருக்கிறேன்.ஆக்கங்கள் அருமை.சிட்டுவின் பாடலகள் கேட்டுக் கலங்கிவிட்டேன்.
இழந்துகொண்டே இருக்கிறோம்.
என்றுதான் ஈடுகட்டப் போகிறோமோ!இன்று செஞ்சோலை சிறுவர்களின் நினை தினமும்.மனதைக் குடைந்து எடுக்கிறது.நம்பிக்கையோடு காத்திருப்போம்.கை கொடுப்போம்.
நன்றி தமிழ்விரும்பி.
//.....ஹேமா Said....
சிட்டுவின் பாடலகள் கேட்டுக் கலங்கிவிட்டேன்.
இழந்துகொண்டே இருக்கிறோம்.
என்றுதான் ஈடுகட்டப் போகிறோமோ!இன்று செஞ்சோலை சிறுவர்களின் நினை தினமும்.மனதைக் குடைந்து எடுக்கிறது.நம்பிக்கையோடு காத்திருப்போம்.கை கொடுப்போம்...../
வணக்கம் ஹேமா,
வருகைக்கும் இடுகைக்கும் நன்றி. சிட்டு எங்களுக்குள் இருந்து வாழ்ந்து மறைந்த சிட்டு. பாட்டுக்கள் எப்பொழுதும் மனதை வருடுவதாகவே உள்ளன. செஞ்சோலையை செங்குருதியால் குளிப்பாட்டிய அரச பயங்கரவாதம் விரைவில் பாடம் கற்கும். நன்றி ஹேமா.
ஒருமுறை என் தளம் குழந்தைநிலா வந்து போகலாமே!
நல்லதோர் இடுகை.
இன்றுதான் பார்க்கக் கிடைத்தது.
Post a Comment