Sunday, June 01, 2008
சமர்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவாக.......
நெஞ்சம் அடைக்குது
நின்னை நினைக்கையில்.
நீ நினைத்ததை முடிப்பவன்.
ஆம் - தலைவன்
நினைத்ததை முடிப்பவன்!.
மாங்குளம் வென்றாய் - எம்
மனதையும் வென்றாய்.
முல்லையை வென்று முடி சூடினாய்.
ஒயாத அலைகள் எப்போதும்
ஒயாமல் சொல்லும் உன்பெயர்.
கிளிநொச்சியில் கிலி கொண்டோடியவனை
பரந்தனில் வைத்து ஒரு பகலில் துரத்தினாய்.
குடாரப்பில் இறங்கி வென்று – ஈழ
கொற்றம் பரப்பினாய் உலகில்.
இத்தாவிலில் உனது சமர் வீரம்
செத்தாலும் அழியாது எமை விட்டு.
நெறுப்பாறுகளை கடந்த உன்னை – இந்த
பருப்பன்களால் நெருங்க முடியவில்லை.
மாரடைப்பினை தான் நீ
வென்று காட்டவில்லை!
பழகியவர் சொல்வார்கள்
பால் மனத்திற்கு நீதான் ராஜாவாம்.
இளகிய நெஞ்சனே – எங்கே
ஒளித்து வைத்தாய் இவ்வளவு வீரத்தை.
நீ காணாத சண்டையும் இல்லை.
உன் பெயர் இல்லாமல் கள வெற்றிகளும் இல்லை.
நீ நிற்கிறியா களத்தில்? –அப்போ
நிம்மதிதான் எமக்கு.
இப்போ மட்டும் என்ன……!
நின் நிழலில் வளர்ந்தோர் நிற்பார்கள்
எப்போதும் எம் நிம்மதிக்காய்.
நெருப்பு வீரனே! களங்களின் நாயகனே!!
உலகம் உள்ளவரை வாழும்
உந்தன் புகழ் – எங்கள்
உயிர் உள்ளவரை வாழும்
உந்தன் நினைவு.
Labels:
பிரிகேடியர் பால்ராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நெகிழவைக்கும் அஞ்சலிப்பதிவு, தொடர்ந்து இடைவெளி இல்லாமல் எழுதுங்கள்
//கானாபிரபா said....
'நெகிழவைக்கும் அஞ்சலிப்பதிவு'
...//
நன்றி கானாபிரபா!
இந்த வீர மறவனுக்கு வேறு என்ன எம்மால் செய்ய முடியும். கண்ணீர்தான் எமது காணிக்கை.
உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.
u r a great person.
all tamil people like ur service.
every people want to do like these.
thank u.
yaalavan
u r a great person.
all tamil people like ur service.
every people want to do like these.
thank u.
yaalavan
நன்றி மாறன்,
எதோ எம்மால் முடிந்தது.
வருகைக்கும் இடுகைக்கும் ந்ன்றி.
உங்கள் உள்ளத்தின் துடிப்பை அப்படியே எடுத்துக் கூறியிருக்கிறீர்கள். என்றோ ஒரு நாள் எமக்கு விடிவு காலம் வரும், எமது காலத்தில் கிடைக்காவிட்டாலும் எமக்கு அடுத்த சந்ததியினருக்குக் கிடைக்கும்.
//Sivappillai Said...
என்றோ ஒரு நாள் எமக்கு விடிவு காலம் வரும்....
//
நன்றி ஐயா, நன்றி. நிச்சயமாக நாம் எல்லோரும் உங்களோடு காத்திருக்கிறோம்.
உன்னை நான் கண்டதில்லை
கேட்டிருக்கிறேன்
நீ பிறந்த மண்ணில் வாழ்ந்ததிலே ஒரு புல்லரிப்பு !
வாருங்கள் நண்பரே!(Anonymous)
//உன்னை நான் கண்டதில்லை
கேட்டிருக்கிறேன்
நீ பிறந்த மண்ணில் வாழ்ந்ததிலே ஒரு புல்லரிப்பு !
....//
அருகே வாழ்ந்தவர்களுக்கு எப்படி இருக்கும். அந்த மாவீரன் வாழ்வான் மனதுக்குள் இப்போது மட்டும்.
nalla manitharhali anaithtuk kollaththan maradippum putru noyum thudikkiratho????..
continue your writing whatever u do and where ever u r...
thanks
Post a Comment