Sunday, June 01, 2008

சமர்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவாக.......



நெஞ்சம் அடைக்குது
நின்னை நினைக்கையில்.
நீ நினைத்ததை முடிப்பவன்.
ஆம் - தலைவன்
நினைத்ததை முடிப்பவன்!.
மாங்குளம் வென்றாய் - எம்
மனதையும் வென்றாய்.
முல்லையை வென்று முடி சூடினாய்.
ஒயாத அலைகள் எப்போதும்
ஒயாமல் சொல்லும் உன்பெயர்.
கிளிநொச்சியில் கிலி கொண்டோடியவனை
பரந்தனில் வைத்து ஒரு பகலில் துரத்தினாய்.
குடாரப்பில் இறங்கி வென்று – ஈழ
கொற்றம் பரப்பினாய் உலகில்.
இத்தாவிலில் உனது சமர் வீரம்
செத்தாலும் அழியாது எமை விட்டு.
நெறுப்பாறுகளை கடந்த உன்னை – இந்த
பருப்பன்களால் நெருங்க முடியவில்லை.
மாரடைப்பினை தான் நீ
வென்று காட்டவில்லை!
பழகியவர் சொல்வார்கள்
பால் மனத்திற்கு நீதான் ராஜாவாம்.
இளகிய நெஞ்சனே – எங்கே
ஒளித்து வைத்தாய் இவ்வளவு வீரத்தை.
நீ காணாத சண்டையும் இல்லை.
உன் பெயர் இல்லாமல் கள வெற்றிகளும் இல்லை.
நீ நிற்கிறியா களத்தில்? –அப்போ
நிம்மதிதான் எமக்கு.
இப்போ மட்டும் என்ன……!
நின் நிழலில் வளர்ந்தோர் நிற்பார்கள்
எப்போதும் எம் நிம்மதிக்காய்.
நெருப்பு வீரனே! களங்களின் நாயகனே!!
உலகம் உள்ளவரை வாழும்
உந்தன் புகழ் – எங்கள்
உயிர் உள்ளவரை வாழும்
உந்தன் நினைவு.