Thursday, December 21, 2006

வேரடா இவர்கள் விடுதலைக்கு.......

எமக்கு என்றுறொரு ஆட்சி இங்கு இருந்தது - அதை
தமக்கு என்று சிங்களம் தட்டிப்பறித்தது.
உமக்கு இனியொருபோதும் சொல்லி புரியாது - என
எமக்கான தேசத்தை பறித்தெடுத்தவர்கள்.

ஈழ விழடுதலைக்காய் எதிரியோடு போராடி
வாழ விரும்பும் வயதில் வரலாறு படைத்தவர்கள்
சூழ நின்று தழுவிய சுற்றங்களை துறந்து
தாழ போன தமிழர் தலை நிமிர்த்தியவர்கள்.

சாவு என்பதை சர்க்கரையாய் நினைத்து - தமை
காவு கொள்ள வந்தோரை கருவோடு அழித்து
தாவு கின்ற புலியாகி தமிழர் வாழ்வை - இந்த
மேவு புவிமீதில் மிளிரச் செய்தவர்கள்.

பாரடா இங்கே துயிலும் இல்லங்களை - அவை
வேரடா எங்கள் விடுதலைக்கு.
சீறடா கொடிய சிங்களம் பொடிபட - இன்றே
கூறடா நாளை கொடி பறக்கும் என்று.

சரிந்து போகும் தமிழர் சரித்திரம் கண்டு - உடனே
புரிந்து எழுந்து புயலாய் பொங்கினர்.
விரிந்து சென்றது எங்கள் விடுதலை தேசம் - இதை
தெரிந்து கொள்ளட்டும் இனி திக்கு நாடுகள்.

2 comments:

said...

"பாரடா இங்கே துயிலும் இல்லங்களை - அவை
வேரடா எங்கள் விடுதலைக்கு.
சீறடா கொடிய சிங்களம் பொடிபட - இன்றே
கூறடா நாளை கொடி பறக்கும் என்று"

உள்ளத்தின் உணர்வுகளை வார்த்தைகளாய் உதிர்த்தமைக்கு நன்றிகள்.....


அரசியலையே வெறுத்த எம்மை எம்மை இப்படி அரசியல் பேச வைத்தது எது..... இந்த சமூகமா அல்ல்லது எம்து வாழ்க்கையா....... இது தான் இப்பொதும் எப்போதும் என் கேள்வி.........


என்றென்றும் அன்புடன்
அருண்மொழி

said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவுகளை முன்னர் அருண்மொழியின் பதிவூடாகவும் பார்த்திருந்தேன். உங்கள் பதிவுகள் பலரையும் சென்றடைய நீங்கள் தமிழ்மணத்தில் இணைந்தால் நல்லது. நம் உறவுகள் பலருக்கும் உங்கள் சிந்தனைகள் சென்றடையும்.